/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனுமதியின்றி மண் கடத்திய லாரி ஓட்டுநர் பிடிபட்டார்
/
அனுமதியின்றி மண் கடத்திய லாரி ஓட்டுநர் பிடிபட்டார்
அனுமதியின்றி மண் கடத்திய லாரி ஓட்டுநர் பிடிபட்டார்
அனுமதியின்றி மண் கடத்திய லாரி ஓட்டுநர் பிடிபட்டார்
ADDED : ஜூன் 01, 2025 12:45 AM
பாண்டி பஜார்,
தி.நகர் வழியாக அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 29ம் தேதி நள்ளிரவில், தி.நகரில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தி.நகர் திருமலை பிள்ளை சாலை வழியாக வந்த லாரியை மடக்கி, சோதனை செய்தனர்.
அனுமதியின்றி மண் ஏற்றி வரப்பட்டது உறுதியானது. அதற்குள் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.
இதையடுத்து, சுரங்கத் துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து, பாண்டி பஜார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், தப்பிய லாரி ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 40, என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.