ADDED : மே 02, 2025 12:26 AM
அ நிறம் | அளவு
கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 8வது பிளாக்கைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 49; லாரி ஓட்டுனர். நேற்று அதிகாலை, டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், மூலக்கடை மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சட்டென, டூ - வீலர் நிலைதடுமாறிய நிலையில், முன்பக்கம் சாய்ந்தவாறு கீழே விழுந்துள்ளார். இதில், டூ - வீலரின் கண்ணாடி கம்பி, ஜெயகுமாரின் மார்பு பகுதியில் குத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
