/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பைக்'கில் மோதிய லாரி பொறியாளர் பலி
/
'பைக்'கில் மோதிய லாரி பொறியாளர் பலி
ADDED : நவ 24, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர்,
மேடவாக்கம் நீலா நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 35; மென்பொறியாளர். இவர் அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை பணி முடிந்து, தன் பைக்கில் வீடு திரும்பினார். அசோக் நகர் 100 அடி சாலையில் சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, இவரது பைக் மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்ட வேல்முருகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.