/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழி தவறிய 3 வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
வழி தவறிய 3 வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 21, 2025 05:44 AM

எண்ணுார்: வழி தவறிய மூன்று வயது ஆண் குழந்தையை மீ ட்டு, பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்காரரை, அனைவரும் பாராட்டினர்.
எண்ணுார் அடுத்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, எட்டாவது பிளாக், 46வது வீட்டில் வசிப்பவர் விஜய், 29; மீனவர். இவரது மனைவி பிரபாவதி, 26, தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு நவீன், 3, என்ற ஆண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம், வீட்டின் கதவை மூடி, குழந்தையுடன் பிரபாவதி துாங்கிக் கொண்டிருந்தார். எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. அப்பகுதியில் குடும்பத்தினர் குழந்தையை தேடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குழந்தை நவீன், எர்ணாவூர் - லிப்ட் கேட் அருகே, வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்ததை, எண்ணுார் காவல் நிலைய போலீஸ் காரர் ரா பின் ஜோஸ் பார்த்துள்ளார்.
குழந்தையை மீட்ட அவர், சுனாமி குடியிருப்பில் இருந்து 600 மீட்டர் துாரத்தில் குழந்தை நின்றதால், அங்கு சென்று விசாரித்தார். அப்போது, எட்டாவது பிளாக்கில் ஒரு குழந்தை மாயமானது தெரிந்தது.
போலீஸ்காரர் ராபின் ஜோஸ், தாய் பிரபாவதியிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தார். போலீஸ்காரரின் இந்த செயலை, சக போலீசார், குடியிருப்பு மக்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

