/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை கிராம சபை கூட்டத்தில் புகார்
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை கிராம சபை கூட்டத்தில் புகார்
குறைந்த மின் அழுத்த பிரச்னை கிராம சபை கூட்டத்தில் புகார்
குறைந்த மின் அழுத்த பிரச்னை கிராம சபை கூட்டத்தில் புகார்
ADDED : ஆக 16, 2025 01:24 AM
குன்றத்துார், கொளப்பாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், குறைந்த மின் அழுத்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என, அமைச்சர் அன்பரசனிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
குன்றத்துார் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சியின் வரவு - செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, கொளப்பாக்கத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்னையால் மக்கள் அவதிக்குள்ளாவதாக தெரிவித்தனர்.
மக்கள் கூறிய புகார்களை சரிசெய்யுமாறு, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பரசன் அறிவுரை வழங்கினார். இதில், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இலவச வீட்டு மனைக்கு லஞ்சம்
தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற தேர்வானவர்களிடம், அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் கேட்பதாக, சிலர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிலம்பாக்கம்
கோவிலம்பாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'காலி மனையில் மீன் கடைகள் வைத்து, கழிவுகளை வீசி செல்வதால் ஏற்படும் சுகாதார பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இறைச்சிக் கூடம் அமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.