/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
மண்டல டேபிள் டென்னிஸ் லயோலா கல்லுாரி 'சாம்பியன்'
/
மண்டல டேபிள் டென்னிஸ் லயோலா கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : அக் 01, 2025 03:13 PM

சென்னை:
சென்னை பல்கலையின் 'ஏ' மண்டலம் மற்றும் மண்டலங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் என, இரு போட்டிகளிலும் லயோலா கல்லுாரி முதலிடங்களை பிடித்து, இரு சாம்பியன் பட்டங்களை வென்றன.
சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி, மேடவாக்கத்தில் இருதினங்களுக்கு முன் நடந்தது.
அதன் இறுதிப் போட்டியில், லயோலா கல்லுாரி, குருநானக் கல்லுாரியை தோற்கடித்து முதலிடத்தை பெற்றது.
அதே இடத்தில், மண்டலங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. அதன் இறுதிப் போட்டியில், லயோலா மற்றும் டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத் தில், 3 - 0 என்ற கணக்கில் லயோலா கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
இரு போட்டிகளில் வெற்றி பெற்ற லயோலா அணியின் வீரர்கள், பல்கலைகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க, சென்னை பல்கலை அணியாக தேர்வாகினர்.