/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி - 20யில் லயோலா ஏமாற்றம் குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'
/
'டி - 20யில் லயோலா ஏமாற்றம் குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'
'டி - 20யில் லயோலா ஏமாற்றம் குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'
'டி - 20யில் லயோலா ஏமாற்றம் குருநானக் கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : மார் 04, 2025 08:26 PM

சென்னை:பவித்சிங் நாயர் கோப்பைக்கான, 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், ஆண்கர் பிரிவில், சென்னை குருநானக் கல்லுாரி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில், லயோலா கல்லுாரியை தோற்கடித்து, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது.
குருநானக் கல்லுாரி சார்பில், 11வது பவித் சிங் நாயர் மெமோரியல் டி - 20 கிரிக்கெட் போட்டி, வேளச்சேரியில் நிறைவடைந்தது. போட்டியில், ஆண்களில், 16 அணிகள், 'லீக்' முறையிலும், பெண்கள், 10 அணிகள், 'நாக் - அவுட்' முறையிலும் மோதின.
ஆண்களில் அனைத்து போட்டிகள் முடிவில், குருநானக் மற்றும் லயோலா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
முதலில் பேட்டிங் செய்த லயோலா அணி, 19.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 140 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த, குருநானக் அணி, 12.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து, 143 ரன்களை எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் வீரர் பூபதி வைஷ்ண குமார், 35 பந்துகளில் ஏழு சிக்சர், நான்கு பவுண்டரியுடன், 73 ரன்களை அடித்து வெற்றிக்கு கைக் கொடுத்தார்.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக குருநானக் வீரர் திரன், ஒட்டு மொத்த போட்டியின் சிறந்த வீரராக குருநானக் வீரர் பூபதி, சிறந்த பேட்ஸ்மேன் லயோலாவின் ஸ்ரீதரன் பிரகாஷ், சிறந்த பவுலராக குருநானக் வீரர் ரோகன், ஆல் ரவுண்ராக குருநாக் வீரர் கார்த்திக் மாணிக்கம் ஆகியோர் பட்டங்களை வென்றனர்.