/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா அபார வெற்றி
/
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா அபார வெற்றி
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா அபார வெற்றி
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா அபார வெற்றி
ADDED : மார் 04, 2025 08:09 PM
சென்னை:திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், 20வது லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், ஆவடியில் நடக்கின்றன.
இதில், பல்வேறு பிரிவுகளில், ஏராளமான நிறுவன அணிகள் பங்கேற்று, லீக் முறையில் மோதி வருகின்றன. அந்த வகையில், 'ஏ' குரூப் போட்டி ஒன்றில், வீல்ஸ் இந்தியா மற்றும் வருங்கால வைப்பு நிதி ஊழியர் அமைப்பு அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த வீல்ஸ் இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில், எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு, 225 ரன்களை அடித்தது. அணியின் வீரர்கள் கவுதம் 76, சதீஷ், 43 ரன்கள் அடித்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த, வருங்கால வைப்பு நிதி ஊழியர் அமைப்பு அணி, 25.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 91 ரன்களில் ஆட்டமிழந்தது. வீல்ஸ் இந்தியா வீரர்கள் அலேக்சாண்டர் மற்றும் சத்தியா குமார் தலா நான்கு விக்கெட்டுகள் எடுத்தனர்.