தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'லுப்தான்சா' ஏர்லைன்ஸ் ஜெர்மன் பயணம் ரத்து

'லுப்தான்சா' ஏர்லைன்ஸ் ஜெர்மன் பயணம் ரத்து

'லுப்தான்சா' ஏர்லைன்ஸ் ஜெர்மன் பயணம் ரத்து


ADDED : பிப் 21, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு 'லுப்தான்சா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம் இயங்குகிறது. அங்கிருந்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை உள்ளது.

ஜெர்மனியின் பிராங்க் பார்ட் நகரில் இருந்து, சென்னைக்கு தினமும் நேரடி விமான சேவை வருகிறது. இரவு 11:50 மணிக்கு, பிராங்க் பார்டில் இருந்து சென்னை வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், மீண்டும் அதிகாலை 1:50 மணிக்கு, பிராங்க் பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும்.

பிராங்க்பார்ட் நகருக்கு, தினமும் இயக்கப்படும் இந்த விமானத்தில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரோம், ஏதேன்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணைப்பு விமானமாக இருப்பதால், எப்போதும் பயணியர் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

சமீபமாக, 'லுப்தான்சா' நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்தநிலையில், நேற்றும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று அதிகாலை 1:50 மணிக்கு, பிராங்க் பார்ட் நகருக்கு புறப்பட வேண்டிய விமானம், ரத்து செய்யப்பட்டது. இதில், பயணிக்க இருந்த 260க்கும் மேற்பட்ட பயணியர் அவதிப்பட்டனர்.

விமான நிறுவனம் ஏற்கனவே, இணையதளம், மொபைல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தததால், பெரும்பாலான பயணியர் விமான நிலையத்திற்கு வரவில்லை. இருப்பினும், சிலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us