ADDED : ஏப் 25, 2026 04:57 PM

அ நிறம் | அளவு
அபிராமபுரம்: மந்தைவெளி, நான்காவது டிரஸ்ட் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரன், 35; சொந்த தொழில் செய்பவர். ஏப்ரல் 24 நள்ளிரவு, சி.வி.ராமன் சாலை - செயின்ட் மேரிஸ் சாலை சந்திப்பு வழியாக, 'பென்ஸ்' காரில் சென்றார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு பென்ஸ் கார், அவரது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு கார்களின் ஓட்டுநர்களும், சிறுகாயமின்றி தப்பித்தனர்.
மயிலாப்பூர் போலீசார் விசாரணையில், விபத்து ஏற்படுத்தியது கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிஜு, 25, என்பது தெரியவந்தது. இவர், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் என்பதும் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
