'டூசன் பாப்கேட்' நிறுவனத்தில் இயந்திர 'ஆப்பரேட்டர்' பயிற்சி
'டூசன் பாப்கேட்' நிறுவனத்தில் இயந்திர 'ஆப்பரேட்டர்' பயிற்சி
ADDED : ஏப் 29, 2026 02:41 AM
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டூசன் பாப்கேட்' நி றுவனம், 'ஸ்கிட் ஸ்டீயர் லோடர்' என்ற கட்டுமான இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான, ஆப்பரேட்டர் பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
கோவை மாவட்டம் அன்னுாரில் உள்ள பாரத் மாதா தொழிற்பயிற்சி நிறுவன கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
'டூசன் பாப்கேட்' நிறுவனத்தினர் கூறியதாவது:
ஸ்கிட் ஸ்டீயர் லோடர் இயந்திரங்கள், கட்டுமான பணிகள், கிடங்கு பணிகள், விவசாயம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இயந்திரத்தை பயன்படுத்த போதிய ஆப்பரேட்டர்கள் இல்லாததால், தொழில் துறைக்கேற்ற வகையில் ஆப்பரேட்டர்களை தயார்படுத்துவதற்காக, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டம், இந்த வகை இயந்திரத்தின் விற்பனையை உயர்த்துவதோடு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்க உதவும்.
இரண்டு மாத பயிற்சியில், அடிப்படை வகுப்பறை மற்றும் நடைமுறை பயிற்சிகளும் இருக்கும். பயிற்சி முடிவில், சான்றிதழ் பெற்ற ஆப்பரேட்டர்களுக்கு, டீலர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
மேலும் தகவலுக்கு 94896 75146, 94874 20246 ஆகிய மொபைல் போன் எண்கள் மற்றும் bobcatindia@doosan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
