தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இயந்திரங்கள் பழுது ஓட்டுப்பதிவு தாமதம்

 இயந்திரங்கள் பழுது ஓட்டுப்பதிவு தாமதம்

 இயந்திரங்கள் பழுது ஓட்டுப்பதிவு தாமதம்


ADDED : ஏப் 23, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாவரம்:தாம்பரம், பொழிச்சலுாரில் மின்னணு இயந்திரங்கள் பழுதானதால், 2 மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

பல்லாவரம் தொகுதி, பொழிச்சலுாரில் மரிய நிவாஷ் பள்ளி, பல்லாவரம் கண்டோன்மென்ட் பள்ளி ஆகிய இரண்டு இடங்களில், பாகம் எண்- 58, 241, 62 வது ஓட்டுச் சாவடியில் ஓட்டுப்பதிவு துவங்கியபோது, மின்னணு இயந்திரங்கள் பழுதாகின.

இதனால், பொதுமக்களுக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், இயந்திரம் பழுது சரிசெய்யப்பட்டு, இரண்டு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

இதேபோல், மேற்கு தாம்பரம், பேபி பள்ளியிலும் மின்னணு இயந்திரம் பழுதாகி, ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us