/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ 2026ல் முடிக்க இலக்கு
/
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ 2026ல் முடிக்க இலக்கு
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ 2026ல் முடிக்க இலக்கு
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ 2026ல் முடிக்க இலக்கு
ADDED : ஜன 30, 2024 12:42 AM

சென்னை, மாதவரம் - சோழிங்கநல்லுார் வழித்தடத்தில் வரும் 2026ல் பணிகளை முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மேம்பால ரயில் பாதைக்காக துாண்கள் அமைத்து, அவற்றில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
ஓ.எம்.ஆர்., சாலை முக்கியமானது என்பதால், பணிகள் தாமதம் இன்றி விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒக்கியம்பேடு மற்றும் காரப்பாக்கம் இடையே பாலம் இணைப்பு பணி முடிந்துள்ளது. அடுத்தடுத்துள்ள துாண்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் முடிந்தவுடன், அதன்மேல் ரயில்பாதை அமைக்க உள்ளோம். 2026ல் இந்த தடத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.