/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரை ஸ்போர்ட்ஸ்/ ரக்பி பிரீமியர் லீக் சென்னை உட்பட 6 அணிகள் பங்கேற்ப்பு

ADDED : ஜூன் 15, 2025 12:27 AM
சென்னை, ஆர்.பி.எல் எனப்படும் ரக்பி பிரீமியர் லீக் எனப்படும் தேசிய ரக்பி போட்டியின் முதல் சீசன் மும்பையின் அத்தெரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளேக்ஸில் இன்று துவங்கித் தொடர்ந்து நடக்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, டில்லி உட்பட மாநிலத்தின் ஆறு அணிகள் போட்டியிடுகிறது. இந்திய பதிப்பில் நடக்கும் முதல் ரக்பி தொடர் என்பதால் ரசிகர்கள் இந்தத் தொடரை அதிக ஆர்வத்தொடு வரவேற்கின்றனர். சென்னை புள்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை ட்ரீமர் அணியை இன்று எதிர்க்கொள்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் புக்மைஷோ இணையதளத்தில் விற்கப்படுகிறது. மேலும் ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலிலும் ஒளிபரப்பப்படுகிறது.
இது குறித்து அந்த நிர்வாகத்தினர் கூறியதாவது:
ரக்பி விளையாட்டு இன்றுவரை வெளிநாட்டவர் விளையாடும் விளையாட்டாகவே இருந்துவருகிறது. இந்தியாவில் ரக்பி விளையாட போதிய வசதிகளும், அதற்கான மைதானங்களும் அதிகம் இல்லை. இந்த புதிய முயற்சியின் மூலம்
இந்தியாவில் ரக்பி விளையாட்டிற்கான ரசிகர்களை அதிகரிக்க விரும்புகிறோம். மேலும் இந்த விளையாட்டிற்கான புரிதலை மக்கள் இடையே புகுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.