/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மே 16, 2025 12:17 AM

அரும்பாக்கம் :மதுரவாயல் - துறைமுகம் இடையே, 20.565 கி.மீ., துாரத்திற்கு, மேம்பால சாலை திட்ட பணிகள், 5,855 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன.
இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில், துறைமுகம் முதல் கோயம்பேடு வரை, முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும்.
இரண்டாவது அடுக்கில், துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
மொத்தம், 650 துாண்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 525 துாண்கள் கூவம் கரையில் அமைகின்றன.
கூவத்தில் மட்டும், 35 மீட்டர் ஆழத்தில் துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாலத்தின் இடையே, 13 இடங்களில் வாகனங்கள் ஏறி, இறங்கும் சாய் தளங்களுடன், சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக, திருமங்கலம், அரும்பாக்கம், அண்ணா நகர் மற்றும் அமைந்தகரை, சூளைமேடு கூவம் கரையில் துாண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
திட்டத்தின் சாலை விரிவாக்கப் பணிக்காக, கோயம்பேடு மேம்பாலம் அருகில், அரும்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, 25 ஆண்டுகளாக அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற திட்டமிடப்பட்டது.
அதற்காக, கடந்த ஜன., 22ல், துறை சார்பில் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த 12ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள, ஆக்கிரமிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பாளர்கள் முன்வராத நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அரும்பாக்கம் போலீஸ் உதவியுடன், மரக்கடை உள்ளிட்ட ஒன்பது கடைகளை அகற்றினர்.
மொத்தம், 30 மீ., நீளமும், 15 மீ., அகலமும் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதன் மதிப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.