ADDED : மார் 07, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா, நாளை இரவு 7:30 மணி முதல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இரவு 8:30 முதல் காலை 4:30 மணி வரை, நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதைத் தொடர்ந்து பஜனையும் நடைபெறும்.
நாளை இரவு 7:30 மணிமுதல் பல்வேறு குழுவினரின் பக்தி பாடல்கள் கச்சேரி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹரிஹரன் ஆகியோர் செய்துள்ளனர்.

