/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகாலிங்கம் கோப்பை செஸ்: 300 வீரர்கள் பங்கேற்பு
/
மகாலிங்கம் கோப்பை செஸ்: 300 வீரர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 01, 2024 01:37 AM

சென்னை:சென்னையில் நேற்று துவங்கிய சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, விளையாடி வருகின்றனர்.
அகில இந்திய சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகம் ஆதரவுடன், சக்தி குரூப் ஆப் கம்பெனி சார்பில், மகாலிங்கம் கோப்பைக்கான 14வது சர்வதேச செஸ் போட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் விடுதி அரங்கில், நேற்று துவங்கியது.
ஜன., 7ம் தேதி வரை நடக்க உள்ள இப்போட்டியில் சர்வதேச வீரர்கள், கிராண்ட் மாஸ்டர்கள், உள்ளூர் வீரர்கள் என, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
மொத்தம் 10 சுற்றுகள் என, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் என, 60க்கும் மேற்பட்டோருக்கு, மொத்தம் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
நேற்று மதியம் 1:00 மணிக்கு, சக்தி குழும தலைவர் மாணிக்கம், போட்டிகளை துவங்கி வைத்தார். நீதிபதி நிர்மல் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.