/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைந்தகரை டாக்டர் வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது
/
அமைந்தகரை டாக்டர் வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது
அமைந்தகரை டாக்டர் வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது
அமைந்தகரை டாக்டர் வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது
ADDED : ஜூன் 12, 2025 12:23 AM

அமைந்தகரை, டாக்டர் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
அமைந்தகரை அய்யாவு காலனியைச் சேர்ந்தவர் மோகன் ஜார்ஜ், 69; பெட்ரோல் 'பங்க்' நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரக்னா ஜார்ஜ், 68; டாக்டர்.
கடந்த ஏப்ரல் மாதம், தன் பீரோவில் இருந்த நகைகளை மோகன் ஜார்ஜ் சரிபார்த்துள்ளார். அப்போது, 60 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரையடுத்து, அமைந்தகரை போலீசார் விசாரித்தனர். இதில், நகை திருடியது அவரது வீட்டு பணிப்பெண்ணான, பூந்தமல்லி குமணன்சாவடியைச் சேர்ந்த சுகன்யா, 33, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 17 சவரன் நகை மற்றும் ஐ போன் மீட்கப்பட்டது.
விசாரணையில், பிரக்னா ஜார்ஜ் பணியாற்றிய தனியார் மருத்துவமனையில், உதவியாளராக சுகன்யா பணிபுரிந்துள்ளார். அவர் மேல் உள்ள நம்பிக்கையில், பிரக்னா ஜார்ஜ் அவரை வீட்டு வேலை செய்ய அழைத்துள்ளார்.
அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு முதல், வாரத்திற்கு ஒருமுறை பிரக்னா ஜார்ஜ் வீட்டிற்கு சென்று, சுகன்யா வேலை செய்து வந்துள்ளார். அப்போது, சிறுக சிறுக நகைகளை திருடியது தெரிய வந்தது.