/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பணிப்பெண் பலி
/
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பணிப்பெண் பலி
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பணிப்பெண் பலி
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பணிப்பெண் பலி
ADDED : மே 14, 2025 12:33 AM
வளசரவாக்கம்,
வளசரவாக்கம், சவுத்ரி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 50. இவர், தந்தை நடராஜன், 78, தாய் தங்கம், 73. மனைவி ஷியாமளா, 45, மகள் ஸ்ரேயா, 20, மகன் ஸ்ராவன், 18, ஆகியோருடன் வசித்தார்.
கடந்த 11ம் தேதி ஸ்ரீராம், அவரது மனைவி, மகளுடன் அடையாறு சென்றிருந்தார். வீட்டில் உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்த தங்கம், நடராஜன் மற்றும் மகன் ஸ்ராவன், வீட்டு பணிப்பெண்ணான, ராமாபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி, 26, ஆகியோர் இருந்தனர்.
மதியம் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் தங்கம், நடராஜன் உயிரிழந்தனர். ஸ்ராவன், சரஸ்வதி ஆகியோர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தப்பினர்.
இதில், படுகாயமடைந்த சரஸ்வதி, மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.