/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறில் 'மலபார் கோல்டு' கிளை திறப்பு
/
அடையாறில் 'மலபார் கோல்டு' கிளை திறப்பு
ADDED : டிச 22, 2025 05:03 AM

சென்னை: மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின், தமிழகத்தின் 33வது கிளை, அடையாறு, எல்.பி., சாலையில், நேற்று திறக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மலபார் மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின், வர்த்தக தலைவர் சபீர் அலி, வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, நவுசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், தமிழக மண்டல தலைவர் யாசர் கூறுகையில், ''14 நாடுகளில் 425 சில்லரை விற்பனை கிளைகளுடன், உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக செயல்படுகிறது.
''இங்கு மைன், எரா, பிரீசியா, எத்தினிக், டிவைன், ஸ்டார்லெட் போன்ற மாடல்களில் நகைகள் உள்ளன. டிச., 31ம் தேதி வரை, நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும்,'' என்றார்.

