/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வணிக வளாகம்,'மல்டி லெவல்' பார்க்கிங்: 6 மாதங்களில் வருகிறது
/
வணிக வளாகம்,'மல்டி லெவல்' பார்க்கிங்: 6 மாதங்களில் வருகிறது
வணிக வளாகம்,'மல்டி லெவல்' பார்க்கிங்: 6 மாதங்களில் வருகிறது
வணிக வளாகம்,'மல்டி லெவல்' பார்க்கிங்: 6 மாதங்களில் வருகிறது
ADDED : செப் 28, 2024 12:08 AM

சென்னை சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், கிண்டி ரயில் நிலையம் முக்கியமானதாக உள்ளது. தினமும் 65,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்கு பன்னடுக்கு 'கார் பார்க்கிங்' அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கிண்டி ரயில் நிலையம் 13.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்த சில மாதங்களில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். இதற்கிடையே, தனியார் பங்களிப்போடு இங்கு பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான, டெண்டர் வெளியிட்டு உள்ளோம்.
மொத்தம் ஐந்து மாடிகள் அமைய உள்ளன. கீழ் தளத்தில் வணிக வளாகம் இடம் பெறும். உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.
மேல் பகுதிகளில், கார்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 150 கார்கள் வரை நிறுத்த முடியும். பணி ஆணை வழங்கி அடுத்த ஆறு மாதங்களில் பன்னடுக்கு கார் பார்க்கிங் கட்டமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.