/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சத்து குறைபாடு குழந்தைக ள் மீது கவனம் ேதவை
/
சத்து குறைபாடு குழந்தைக ள் மீது கவனம் ேதவை
ADDED : செப் 29, 2024 12:50 AM
சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில், 'சிறார் மருத்துவ கல்விசார்' குறித்த இரு நாள் மாநாடு, நேற்று துவங்கியது. இதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசியதாவது:
பல்வேறு நாடுகளைப்போல், குழந்தை நல மருத்துவத்தில், திறன்சார் கல்வியை வழங்க வேண்டும்.குழந்தைகளை பாதுகாக்க, பல்வேறு வகையான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், உலகளவில் தினமும், 14,000 குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால், 3.8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதுடன், அக்குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.