/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து மூதாட்டியை குத்தி திருட முயன்றவர் சிக்கினார்
/
வீடு புகுந்து மூதாட்டியை குத்தி திருட முயன்றவர் சிக்கினார்
வீடு புகுந்து மூதாட்டியை குத்தி திருட முயன்றவர் சிக்கினார்
வீடு புகுந்து மூதாட்டியை குத்தி திருட முயன்றவர் சிக்கினார்
ADDED : மார் 15, 2025 11:58 PM
சென்னை,வளசரவாக்கம், பிருந்தாவன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணி, 65. இவர், மகள் திவ்யா வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம், வீட்டில் தனியாக இருந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க நபர், மருந்துகள் டெலிவரி செய்வது போல் முகமூடி அணிந்து வந்துள்ளார்.
மகள் தான் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்துள்ளதாக நினைத்த மணி, டெலிவரி ஊழியரை உள்ளே அழைத்துள்ளார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில், வீட்டிற்குள் வந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மணியின் கையில் குத்தியுள்ளார்.
பின், நகை, பணம் இருக்கும் இடத்தை காட்டும்படி கூறியுள்ளார். அப்போது, வலி தாங்க முடியாமல், மணி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதனால், மர்மநபர் தப்பியோடினார். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணி, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, ராமாபுரம், பாரதி சாலையைச் சேர்ந்த நாகமுத்து, 41 என்பவரை கைது செய்தனர்.