/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுாலகத்தில் பெண்களிடம் அத்துமீறிய நபர் கைது
/
நுாலகத்தில் பெண்களிடம் அத்துமீறிய நபர் கைது
ADDED : நவ 18, 2025 04:45 AM
புளியந்தோப்பு: மது போதையில், நுாலகத்திற்குள் சென்று பெண்களை அவதுாறாக பேசி தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி, 30. இவர், ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் உள்ள நுாலகத்தில், நுாலக பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி மாலை, வளர்மதி மற்றும் அவருடன் பணிபுரியும் பெண் ஒருவர் நுாலகத்தில் இருந்தபோது, அங்கு மது போதையில் வந்த நபர், பெண்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக வளர்மதியிடம் புகாரை பெற்ற ஓட்டேரி போலீசார், வழக்கு பதிவு செய்து, ஓட்டேரி, மங்களபுரம் சந்திரயோகி சமாதி தெருவை சேர்ந்த சம்பத்குமார், 45, என்பவரை கைது செய்தனர். மேலும், புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகே, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த மார்ட்டின், 28, மற்றும் 'மாட்டு' ரவி, 24, ஆகியோரையும், நேற்று கைது செய்தனர்.

