/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது
/
துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது
ADDED : டிச 09, 2025 04:42 AM
சென்னை: எழும்பூரில், பெண் துாய்மைப் பணியாளரை தகாத வார்த்தையால் பேசி, தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி, 43. இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் காலை எழும்பூர் காந்தி இர்வின் பாலம் - ஈ.வெ.ரா., சாலை சந்திப்பு அருகே நடைபாதையில் துப்புரவு பணி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக நடந்து சென்றவரை ஓரமாக போகும் படி லட்சுமி கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் ஹிந்தியில் தகாத வார்த்தையால் பேசி, துப்புரவு பணியாளரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பின், துாய்மைப் பணியாளர் லட்சுமி அளித்த புகாரின் படி, எழும்பூர் போலீசார், காஷ்மீரைச் சேர்ந்த ரவீந்தர் சிங், 25, என்பவரை கைது செய்தனர்.

