ADDED : மே 25, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி :திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வம், 37, ராஜா, 24. இருவரும், சோழிங்கநல்லுார் ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் தங்கி, அங்கு ஓட்டுநராக பணி புரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, ராஜா போதையில் அங்கு நின்ற வாகனங்களை கையால் அடித்துள்ளார். இதை செல்வம் தட்டிக் கேட்டார்.
அதனால் ஆத்திரமடைந்த ராஜா, கல்லால் செல்வம் தலையில் தாக்கினார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.