தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதியவரை கல்லால் தாக்கியவர் கைது

முதியவரை கல்லால் தாக்கியவர் கைது

முதியவரை கல்லால் தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 28, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:முதியவரை கல்லால் தாக்கிய, போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

தேனாம்பேட்டை, ராமலிங்கேஷ்வர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், 60. இவரது மகன் ராமு, 24. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிரியமதன், 27, என்பவர், கடந்த 25ம் தேதி இரவு, மது போதையில் வீண் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது மனோகரன், சண்டையை விலக்கி பிரியமதனை சமாதானப்படுத்தினார். இதில் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து, மனோகரன் மீது வீசி தாக்கியது மட்டுமல்லாமல், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

காயமடைந்த மனோகரன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரை விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், பிரியமதனை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us