ரயிலில் பயணியை கம்பியால் தாக்கி போன் பறித்தவர் கைது
ரயிலில் பயணியை கம்பியால் தாக்கி போன் பறித்தவர் கைது
ADDED : ஜூன் 18, 2026 03:34 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை கடற்கரை -- கோட்டை ரயில் நிலையம் இடையே, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சென்ற மின்சார ரயிலில், பயணியை வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி, அவரிடமிருந்து மொபைல்போனை பறித்து, ரயிலின் செயினை இழுத்து நிறுத்தி, தப்பிசென்றார்.
இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா உதவியுடன், 12 மணி நேரத்தில் திருடனை கைது செய்தனர்.
விசாரணையில், மொபைல் போனை திருடியவர், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக்சிங், 29 என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
