ADDED : ஏப் 09, 2025 12:14 AM
அ நிறம் | அளவு
நீலாங்கரை,
இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் சூர்யா, 30. கூலி வேலை செய்கிறார்.
இவர், நேற்று மது குடிக்க அவரின் தாயிடம் பணம் கேட்டார். 'கடையில் 50 ரூபாய் பாக்கி தர வேண்டும். நாளைக்கு வாங்கி தருகிறேன்' என, தாய் சமாளித்துள்ளார். திடீரென, அந்த கடைக்கு சென்ற சூர்யா, அங்கிருந்த காமாட்சி என்பவரிடம், 100 ரூபாய் கேட்டுள்ளார். அவர், 'உன் அம்மாவிடம் தான் கொடுப்பேன். உன்னிடம் தர மாட்டேன்' என, கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சூர்யா, பெண்ணை தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.
புகாரின் படி, சூர்யாவை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
