ADDED : ஜன 25, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
சென்னை: துாய்மைப் பணியாளரை கத்தியால் தாக்கி, கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுப்பேட்டை, அய்யாசாமி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 25; துாய்மைப் பணியாளர். இவர், கடந்த 22ம் தேதி அதிகாலை, எழும்பூர் பம்பிங் ஸ்டேஷன் சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது, அவருக்கு பழக்கமான புதுப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன், 32, என்பவர், சரவணனிடம் வீண் தகராறு செய்து, கத்தியால் தாக்கி தப்பிச் சென்றார்.
இதில், கை மற்றும் வயிற்றில் காயமடைந்த சரவணன், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, எழும்பூர் போலீசார் விசாரித்து, கொலை முயற்சி வழக்கில் மணிமாறனை நேற்று கைது செய்தனர்.
