/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் போலீசின் வீடு புகுந்து திருடியவர் கைது
/
பெண் போலீசின் வீடு புகுந்து திருடியவர் கைது
ADDED : டிச 18, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவல்லிக்கேணி, காசிம் அலி 1வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 24; ஆயுதப்படை போலீஸ். இவர், வீட்டை பூட்டி குளியல் அறையில் சாவியை வைத்து செல்வது வழக்கம்.
வழக்கம்போல, கடந்த 3ம் தேதி பணிக்கு சென்று மாலை 4:00 மணிக்கு வீடு திருப்பினார். அப்போது, வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.
கைப்பையில் வைத்திருந்த, 13,500 ரூபாயும், டிராலி பெட்டியும் மாயமாகி இருந்தது. இது குறித்து, ஆயிரம்விளக்கு போலீசார் விசாரித்தனர்.
இதில், பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த விஜய், 24, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.