/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி கண்ணாடியை உடைத்த நபர் கைது
/
லாரி கண்ணாடியை உடைத்த நபர் கைது
ADDED : ஜன 13, 2026 05:57 AM
அசோக் நகர்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்சன், 58. குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுநர். கடந்த 10ம் தேதி மதியம், குடிநீர் வினியோகம் செய்வதற்காக, டேங்கர் லாரியில் ரங்கராஜபுரம் பிரதான சாலை, முத்து மாரியம்மன் கோவில் அருகே சென்றார்.
அங்கு மது போதையில் இருந்த நபர், தனது கையில் இருந்த 'கூல் டிரிங்ஸ்' பாட்டிலை வீசி, லாரியின் முன் பக்க கண்ணாடியை உடைத்தார்.
லாரியில் இருந்து இறங்கிய ஜான்சன், 'ஏன் லாரியின் கண்ணாடியை உடைத்தாய்' என கேட்டபோது, 'நீ ஏன் என்னை மோதுவது போல் வந்தாய்' எனக் கூறி, மற்றொரு பாட்டிலால் ஜான்சன் தலையில் தாக்கினார்.
இது குறித்த புகாரை அடுத்து, விசாரித்த அசோக் நகர் போலீசார் லாரியின் கண்ணாடியை உடைத்த கோடம்பாக்கம், என்.டி.எச்., தெருவைச் சேர்ந்த பிரசன்னகுமார், 31, என்பவரை கைது செய்தனர்.

