ADDED : நவ 26, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் விக்னேஷ், 28, என்பவரை, 10 ஆண்டுகளாக காதலித்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ், வேறொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து காதலித்த பெண் கேட்டபோது, இதை வெளியே சொன்னால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக, விக்னேஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், திருவள்ளூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
பூந்தமல்லி போலீசார், நேற்று முன்தினம் விக்னேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

