ADDED : ஜன 13, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவரும், திருவள்ளூர், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ஜான் மோசஸ், 27 என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமண ஆசைகாட்டி ஜான் மோசஸ் அடிக்கடி பணம் வாங்கி உள்ளார்.அதேபோல அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஜான் மோசஸ் வேறொரு பெண்ணை, கடந்த டிச., 12ம் தேதி, திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த அவரது காதலி, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், ஜான் மோசஸை நேற்று கைது செய்தனர்.
