/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் கடன் ரூ.2.30 கோடி மோசடி செய்தவர் கைது
/
தொழில் கடன் ரூ.2.30 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 28, 2024 12:37 AM
சென்னை, இந்தியன் வங்கி, வடபழனி கிளை மேலாளர் ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'போலி ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, 2.30 கோடி ரூபாய் தொழில் கடன் பெற்ற ரமேஷ், வேலவன் தீபக், சரவணகுமார், பவளபாலன் ஆகியோர், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.
'அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்' என, கூறியிருந்தார்.
இதுகுறித்து, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வங்கியை ஏமாற்றும் நோக்கில், 'வி டேக் பார்க்' என்ற நிறுவனத்தை பெயரளவில் போலியாக துவக்கி, போலி மதிப்பீட்டு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்று, திருப்பி செலுத்தாதது உறுதியானது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட நீலாங்கரை ரங்கா ரெட்டி கார்டன், 2வது பிரதான சாலையைச் சேர்ந்த ரமேஷ், 57 என்பவரை, போலீசார் கைது செய்தனர்.