/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு கட்டி தருவதாக மோசடி செய்தவர் கைது
/
வீடு கட்டி தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூன் 22, 2025 12:14 AM
திருவான்மியூர், திருவான்மியூரைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் வனஜா சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான நிலம், திருவான்மியூரில் உள்ளது.
இதில், குடியிருப்பு கட்ட, 2024ம் ஆண்டு, கொட்டிவாக்கம், சங்கம் காலனியைச் சேர்ந்த கணேஷ்பாண்டியன், 54, என்பவரிடம் பேசினர்.
அதன்படி, எட்டு வீடுகள் கட்டி, அதில் நான்கு வீடுகள் நிலத்தின் உரிமையாளர்களுக்கு என பேசி, 25 லட்சம் ரூபாய் மற்றும் அசல் ஆவணங்களை கணேஷ்பாண்டியன் வாங்கி உள்ளார். ஆனால், பேசியபடி வீடும் கட்டவில்லை. பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து, பாஸ்கர் திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கணேஷ்பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.