/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 2.01 கோடி கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது
/
ரூ. 2.01 கோடி கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது
UPDATED : ஏப் 24, 2025 06:54 AM
ADDED : ஏப் 24, 2025 12:22 AM

ஆவடி, மணலி, பெரிய தோப்பு, தாமரை குளம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 53. இவர், மணலி பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரியும் போது, அவருடன் பணிபுரிந்த பழனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், ரமேஷிடம் தொழில் மற்றும் வியாபாரம் செய்ய பணம் தேவைப்படுவதாகவும், தொழில் துவங்கி அதன் வாயிலாக அதிக லாபம் பெற்று தருவதாகவும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, கீழ்க்கொடுங்காலுார் பகுதியைச் சேர்ந்த பழனி, 44  என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன்படி, ரமேஷ், தன் வங்கி கணக்கில் இருந்து 1.36 கோடி ரூபாயுடன், நண்பர் மற்றும் உறவினர்களிடம் இருந்து 65 லட்சம் ரூபாய் கடனாக பெற்று பழனியிடம் கொடுத்துள்ளார். 2.01 கோடி ரூபாயை பெற்றுக் கொண்ட பழனி, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். இது குறித்து ரமேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த பழனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

