/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு வாங்கி தருவதாக ஆசைகாட்டி ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
வீடு வாங்கி தருவதாக ஆசைகாட்டி ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது
வீடு வாங்கி தருவதாக ஆசைகாட்டி ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது
வீடு வாங்கி தருவதாக ஆசைகாட்டி ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : மே 18, 2025 03:16 AM

ஆர்.கே.நகர்:கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது அக்பர், 42. இவருக்கு, ராயபுரம் மண்டல அலுவலகத்தில், அலுவலராக பணிபுரியும் கொருக்குப்பேட்டை, டிரைவர் காலனியைச் சேர்ந்த மஞ்சுளா, 47, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
மஞ்சுளா 'தனக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை தெரியும் என்றும், எம்.கே.பி.நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகவும்' ஆசைகாட்டி உள்ளார்.
இதை நம்பிய முகமது அக்பர், 2021ல் அவர் கேட்டபடி, 3.50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், அவரது உறவினர்களிடம் இதுகுறித்து கூறி, அவரது மூன்று உறவினர்களுக்கு மூன்று வீடு கேட்டு, மஞ்சுளாவிடம் 8.50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் மஞ்சுளா வீடு ஒதுக்கீடு பெற்று தரவில்லை. பணம் தராமலும் அலைகழித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த முகமது அக்பர், மஞ்சுளா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக்கோரி, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், இவர் மீது ஏற்கனவே, இதுதொடர்பாக ஒரு வழக்கு உள்ளதும், இதனால் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மஞ்சுளாவை நேற்று கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மகளை தேடி வருகின்றனர்.