/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தவர் கைது
/
ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தவர் கைது
ADDED : மே 24, 2025 12:17 AM

சென்னை :அடையாறு எஸ்.பி.ஐ., வங்கியில் முதன்மை மேலாளராக பணிபுரிபவர் ஹெரால்டின் மினி. இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு விபரம்:
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், 'அன்னை காஸ்டிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில், 72.55 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெற்றார்.
வாங்கிய கடனில் தொழிலை விரிவுப்படுத்தாமலும், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தாமலும் ஏமாற்றி வருகிறார்.
கடன் தொகையை சொந்த செலவிற்காக பயன்படுத்தி வங்கிக்கு இழப்பீடு செய்த அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, தொழில் கடன் பெற்று வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய வேல்முருகனை, நேற்று கைது செய்தனர்.