தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதியவரின் கவனத்தை மாற்றி வழிப்பறி செய்த நபர் கைது

 முதியவரின் கவனத்தை மாற்றி வழிப்பறி செய்த நபர் கைது

 முதியவரின் கவனத்தை மாற்றி வழிப்பறி செய்த நபர் கைது


ADDED : மே 24, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி: வியாசர்பாடி, சுந்தரம் மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஆணைமுத்து, 77; கோயம்பேடு சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ஆணைமுத்துவிடம் பேச்சு கொடுத்துள்ளார். தான் வைத்திருந்த ஒரு பேப்பர் விழுந்துவிட்டதாகவும், அதை பார்த்தீர்களா எனவும், ஆணைமுத்துவிடம் கேட்டுள்ளார்.

மேலும், சட்டை பாக்கெ ட்டுகளில் இருக்கும் ரசீதுகளை காட்டும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து ஆணைமுத்து, மேல் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரசீதை எடுக்கும்போது, அவரிடம் இருந்த 5,000 ரூபாயை மர்ம நபர் பறித்து தப்பினார்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன், 57, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us