/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருடிய ஆட்டோவில் 'மப்'பில் துாங்கியவர் கைது
/
திருடிய ஆட்டோவில் 'மப்'பில் துாங்கியவர் கைது
ADDED : ஜன 09, 2025 02:46 AM

அமைந்தகரை:அமைந்தகரை, பி.பி., தோட்டம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜோசப், 54; ஆட்டோ ஓட்டுனர். கடந்த 7ம் தேதி காலை இவரது ஆட்டோ திருட்டு போனது.
இதுகுறித்து, அமைந்தகரை போலீசில், நேற்று முன்தினம் ஜோசப் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அன்று இரவே கோயம்பேடு நியூ காலனி மேம்பாலத்தில் நின்றிருந்த ஆட்டோவை, போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஆட்டோவில் மது போதையில் துாங்கிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில், அயப்பாக்கத்தைச் சேர்ந்த பாக்யராஜ், 52, என்பதும், அமைந்தகரையில் திருடிய ஆட்டோவில், ஒருநாள் முழுதும் சவாரி ஏற்றி சம்பாதித்த பணத்தில் மது அருந்தி, போதையில் ஆட்டோவிலேயே துாங்கியதும் தெரிந்தது.
அவர் மீது, சேத்துப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில், இரு வழக்குகள் உள்ளன. ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், பாக்யராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.