/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஓட்டுநரிடம் பணம் பறித்தவர் கைது
/
கார் ஓட்டுநரிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : ஜூன் 28, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 43; கார் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு சூளைமேடு அடுத்த பெரியார்பாதை, புத்துக்கோவில் அருகே நடந்து சென்றார். அவரை வழிமறித்த மர்மநபர், கத்திமுனையில் சட்டையில் இருந்த, 1,800 ரூபாயை பறித்து தப்பிச் சென்றார்.
இது குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர். இதில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 34, என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், பணத்தையும், கத்தியும் பறிமுதல் செய்தனர்.