/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்
/
கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்
ADDED : ஜூலை 09, 2025 12:19 AM
சென்னை: மெரினாவில், கத்திமுனையில் டிபன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 36. இவர், மெரினா அணுகுசாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, அவரது கடைக்கு எதிரே உள்ள 'கூல்பார்' கடையில் பணிபுரியும் வினோத், 25, என்பவர், ராஜாவிடம் கத்திமுனையில் 500 ரூபாய் பறித்து தப்பினார்.
இது குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வினோத்தை, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, நான்கு மொபைல் போன்கள், ஒரு கத்தி, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் மீது, ஏற்கனவே மொபைல் போன் திருட்டு வழக்கு உள்ளது.