/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டாஸ்மாக்' ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
/
'டாஸ்மாக்' ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : டிச 26, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருகம்பாக்கம்,விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் பணி செய்து வருபவர் ஜீவானந்தம், 40. இவர், நேற்று முன்தினம் மதியம் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர், ஜீவானந்தத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 1,000 ரூபாய் பறித்து சென்றார். இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த, கொளப்பாக்கத்தை சேர்ந்த 'துப்பாக்கி' கார்த்திக், 45, என்ற ரவுடியை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கார்த்திக் மீது, ஏற்கனவே 30 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து, ஒரு கத்தி மற்றும் 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

