/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
/
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : ஏப் 14, 2025 01:32 AM

கோயம்பேடு:கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வாலிபரிடம் பணம் பறித்தது தொடர்பாக, சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், 30. இவர், அம்பத்துாரில் உள்ள வெல்டிங் கடையில் வெல்டராக பணி செய்து வருகிறார்.
இவர், தன் ஊரில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்ற, சொந்த ஊர் செல்ல, 11ம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார்.
நேர கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அருகே காத்திருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், பச்சையப்பனை மிரட்டி, கையால் தாக்கி, அவரிடம் இருந்த, 32,000 ரூபாய் பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரையடுத்து, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, பணம் பறித்த நெற்குன்றத்தை சேர்ந்த சங்கர நாராயணன், 21 மற்றும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 27,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.