/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
/
போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
ADDED : மே 31, 2025 03:21 AM
அமைந்தகரை:அமைந்தகரை, வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் மோனிகா, 23. இவர், கடந்த 2021 பிப்., 26ம் தேதி வீட்டில் தாய் ஜெயந்தியுடன் இருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், இருவரையும் கத்தியால் தாக்கி, நகைகள் பறித்து தப்பினர். காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்ற நிலையில், ஜெயந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்கில், புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்த அந்தோணிகுமார், 36, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளிவந்த, அந்தோணிகுமார், வழக்கு தொடர்பாக, மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து, 2024 மே 6ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிடியாணை பிறப்பித்தும், ஓராண்டாக தலைமறைவாக இருந்த அந்தோணிகுமாரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.