/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது
/
வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது
வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது
வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது
ADDED : டிச 18, 2024 12:27 AM
அரும்பாக்கம், அரும்பாக்கம், சான்றோர்பாளையம் ராமசாமி தெருவை சேர்ந்த முருகன், 61. இவரது வீட்டின் முதல் தளத்தில், கடந்த 2021ம் ஆண்டு, காஞ்சனா, 44, என்பவர், 15 லட்சம் ரூபாய் அளித்து குத்தகைக்கு எடுத்து தங்கினார்.
இந்நிலையில், வீட்டை காலி செய்ய வேண்டும் என, தனியார் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.
இதுகுறித்து காஞ்சனா விசாரித்த போது, முருகன் தனியார் வங்கியில் வீட்டை வைத்து கடன் பெற்று, 1.91 கோடி ரூபாய் நிலுவை தொகை இருந்தது தெரியவந்தது.
இதனால், முருகனிடம்அளித்த, 15 லட்சம் ரூபாயை காஞ்சனா திருப்பி கேட்டார். ஆனால், முருகன் பணத்தை அளிக்காமல் தலைமறைவானார்.
இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து, திருவேற்காட்டில் பதுங்கியிருந்த முருகனை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.