ADDED : செப் 22, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
குரோம்பேட்டை: பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், கல்லுாரி மாணவியரிடம் ஆபாச செய்கை காட்டிய நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தனியார் கல்லுாரி இயங்கி வருகிறது. நேற்று மாலை கல்லுாரி முடிந்து, ஏராளமான மாணவியர், ரேடியில் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர், தனது ஆடைகளை கழற்றி, மாணவியரிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த மாணவியர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அந்நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்திரன், 32, என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது. இதுகுறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
