/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொதிக்கும் எண்ணெய்யை மச்சான் மீது ஊற்றியவர் கைது
/
கொதிக்கும் எண்ணெய்யை மச்சான் மீது ஊற்றியவர் கைது
ADDED : மே 20, 2025 01:29 AM
செம்மஞ்சேரி,
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் பழனி, 36. இவர், சோழிங்கநல்லுார், டி.என்.எச்.பி., காலனி சாலையில், டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவரது தங்கையின் கணவர் ரவி, 42. மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவர், பழனி கடைக்கு சென்று, 'நீ அடைக்கலம் கொடுப்பதால் தான், என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவில்லை' எனக்கூறியுள்ளார்.
இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கடையில் கடாயில் வடை சுட எண்ணெய் கொதித்து கொண்டிருந்தது.
ஆத்திரமடைந்த ரவி, கடாயை துாக்கி எண்ணெய்யை, பழனி உடலில் கொட்டினார். பலத்த காயமடைந்த பழனி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, ரவியை கைது செய்தனர்.