தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலி ஆவணம் கொடுத்து ' சிம் கார்டு ' வாங்கியவர் கைது

 போலி ஆவணம் கொடுத்து ' சிம் கார்டு ' வாங்கியவர் கைது

 போலி ஆவணம் கொடுத்து ' சிம் கார்டு ' வாங்கியவர் கைது


ADDED : ஜூலை 31, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்பிளனேடு: பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 34; தனியார் மொபைல் போன் கடையின் மேலாளர். நேற்று முன்தினம், பூக்கடை பகுதியில் உள்ள கிளையில் பணியில் இருந்தார்.

அப்போது, ஓட்டுநர் உரிமத்தை கொடுத்து, இரு 'போஸ்ட்பெய்டு' சிம் கார்டுகளை ஒருவர் கேட்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்தபோது, போலி என்பது தெரிந்தது.

எஸ்பிளனேடு போலீசார் வந்து, அந்நபரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சஞ்சய் வர்மா, 53, என்பதும், போலி ஆவணங்கள் கொடுத்து திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சிம் கார்டுகளை வாங்கி பணமோசடி செய்ததும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது கேரளா மாநில காவல் நிலையங்களில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்குகளும், சென்னையில் இரு திருட்டு வழக்குகளும் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us